இலங்கை அரசாங்கத்தை கவிழ்க்க முயற்சிக்கும் எதிர்க்கட்சிகள் எதிர்காலத்தில் சிறைச்சாலைக்கு செல்ல வேண்டி ஏற்படும் என்று அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.
ரிதிமாலியத்த பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
“..ஆட்சியைக் கவிழ்ப்பதாக பீய்த்துக் கொள்ளும் எதிர்கட்சிகளுக்கு வெளியில் தெரியாவிடினும், அவர்களின் பணி தொடர்பான கோப்புகள் (File) உள்ளிருந்து உருவாக்கப்படுகின்றன. இன்னும் 02 அல்லது 03 மாதங்களில் ஒன்றிரண்டு வழக்குகள் நீதிமன்றத்துக்கு வரும். வழக்குகள் விசாரிக்கப்பட்டு தீர்ப்புகள் வருகின்ற போது, தற்போதைய அரசாங்கத்தை கவிழ்க்க நினைப்பவர்கள் சிறைக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்படலாம். தற்போதைய அரசை யாராலும் கவிழ்க்கவும் முடியாது…” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
0 Comments