ஆட்சியிலுள்ள அநுரகுமார திஸாநாயக்கவின் அரசாங்கம் எவ்வளவு காலம் நீடிக்கும்? என்பது குறித்து முன்னாள் அரசியல்வாதிகள் ஆலோசித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்காக தமது ஆஸ்தான ஜோதிடர்களிடம் ஆலோசனைகளை பெற்று வருவதாக தென்னிலங்கை ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பொதுத் தேர்தலின் போது சரியான முறையில் செயற்பட்ட போதிலும், தாம் தோல்வியடைந்துள்ளதாக பல முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள்பலர் மன வேதனையில் உள்ளனர். கடந்த அரசாங்கத்தில் பிரபல்யமாக இருந்த பல அரசியல்வாதிகள் ஜோதிடர்களின் இல்லங்களில் முகாமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தற்போதைய அரசாங்கத்தை தோற்கடிக்க வழிமுறைகள் உள்ளதா? என்பது குறித்தும் பலர் பரிசீலித்து வருவதாகவும் குறித்த செய்தியில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
0 Comments