Ticker

6/recent/ticker-posts

வெளிநாட்டுக்கு செல்லவுள்ள முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன.

தாம் அரசியலில் இருந்து இடைவேளையைப் பெற்றுக் கொள்ளவுள்ளதாக முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஊடகங்களிடம் கருத்து பரிமாறும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மூன்றில் இரண்டு (2/3) அறுதிப் பெரும்பான்மையை வழங்கி புதிய கொள்கைகளைக் கொண்ட அரசாங்கத்திற்கு மக்கள் ஆணையானது வழங்கப்பட்டுள்ளது. 

நாட்டில் நிலவுகின்ற பிரச்சினைகளுக்கு உரியத் தீர்வுகள் தங்களிடம் உள்ளதாக தற்போதைய அரசாங்கம் உறுதியளித்துள்ளது. 

அப்ணிகளை நிறைவேற்றுவதற்கு ஜனநாயக ரீதியில் இடமளிக்க வேண்டும் என்பது எம்முடைய பொறுப்பாகும். 

இந்நிலையில், எந்தவொரு அரசியல் நடவடிக்கைகளிலும் தாம் ஈடுபடப் போவதில்லை என்று முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அத்துடன், நான் எந்தவொரு அரசியல் கட்சியிலும் அங்கம் வகிக்கவில்லை. கலாநிதி பட்டப்படிப்பை மேற்கொள்ளும் பொருட்டு எதிர்வரும் 03 ஆம் திகதி நாட்டிலிருந்து வெளியேறவுள்னேன். 

ஆகையால், அரசியலிலிருந்து தற்காலிக இடைவேளை ஒன்றைப் பெற்றுக் கொள்ளவுள்ளதாகவும் முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.


Post a Comment

0 Comments