இலங்கையின் புதிய பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதியரசர் முர்து பெர்னாண்டோ அவர்கள் இன்று (02) சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளார்.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களுடைய முன்னிலையில் இந்நிகழ்வு இடம்பெறவுள்ளது. பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய ஓய்வு பெறும் நிலையில், முர்து பெர்னாண்டோ இப்பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டார்.
1985 இல் சட்டமா அதிபர் திணைக்களத்தில் இணைந்து கொண்ட இவர், 1997 ஆம் ஆண்டு பிரதி சொலிசிட்டர் ஜெனரலாகவும், 2014 ஆம் ஆண்டு மேலதிக சொலிசிட்டர் ஜெனரலாகவும் பதவி உயர்வினைப் பெற்றார்.
2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் உயர் நீதிமன்ற நீதியரசராக நியமிக்கப்பட்ட அவர், 2024 ஒக்டோபர் 10 ஆம் திகதி பதில் பிரதம நீதியரசராகவும் நியமிக்கப்பட்டார்.
இந்நாட்டின் பிரதம நீதியரசராக பதவியேற்கும் 02 வது பெண்மணியாக முர்து பெர்னாண்டோ வரலாற்றில் இடம் பிடிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments