லிட்ரோ எரிவாயு (Litro Gas) விலைச் சூத்திரத்தின் பிரகாரம் 2024 நவம்பர் மாதம் லிட்ரோ எரிவாயுவின் விலைகள் திருத்தப்படாது என்று லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்தன இன்று (03) தெரிவித்தார்.
இதன் பிரகாரம், கடந்த 2024 ஒக்டோபர் மாதம் இடம் பெற்ற லிட்ரோ எரிவாயுவின் விலையே தற்போதும் செல்லுபடியாகும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
12.5 Kg லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 3,690 ரூபாவாகவும், 05 Kg சிலிண்டரின் விலை 1,482 ரூபாயாகவும், 2.3 Kg சிலிண்டரின் விலை 694 ரூபாவாகவும் உள்ளதாகவும் அதன் தலைவர் மேலும் தெரிவித்தார்.
0 Comments