Ticker

6/recent/ticker-posts

இலங்கையர்களை திருமணம் செய்வதற்கு ஜப்பானியர்கள் ஆர்வம்

சமீபத்திய காலங்களில் ஜப்பானியர்களுக்கும் இலங்கையர்களுக்குமிடையில் காணப்படும் நெருக்கமான கலாசார சமநிலை காரணமாக ஜப்பானியர்கள் இலங்கையர்களை திருமணம் செய்வதற்கு ஆர்வம் காட்டுவதாக கார்டின் மெரேஜ் நிறுவனத்தின் உரிமையாளரான மியகோ தகசு என்பவர் தெரிவித்துள்ளார்.



கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். ஜப்பானியர்களை திருமணம் செய்ய விரும்பும் இலங்கையர்களிடம் எவ்வித கட்டணங்களும் அறவிடாமல், ஜப்பான் - இலங்கை திருமண சேவையை ஆரம்பிப்பதற்கு தமது நிறுவனம் விரைவில் நடவடிக்கைகளை மேற்கொள்ளும்  என்றும் அவர் கூறியுள்ளார்.

ஜப்பானிலுள்ள பிரைடல் எலலைன்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனமான கார்டின் மெரேஜ் நிறுவனம் டோக்கியோவில் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

Post a Comment

0 Comments