சீரற்ற காலநிலை காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட 2024 ஆம் ஆண்டுக்கான G.C.E A/L பரீட்சை நாளை (04.12.2024) முதல் மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
GCE (A/L) பரீட்சை கடந்த நவம்பர் 25 ஆம் திகதி ஆரம்பமாகிய நிலையில், கனமழை காரணமாக 27 ஆம் திகதி முதல் பரீட்சை நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தன.
இதன்படி, நாளை (04) முதல் மீண்டும் பரீட்சை ஆரம்பிக்கப்படும் எனவும், நாளைய தினம் இடம்பெறவுள்ள பாடங்களின் பிரகாரம் பரீட்சைகள் வழமை போன்று நடைபெறும் என்றும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர (Amith Jayasundara) தெரிவித்துள்ளார்.
பரீட்சை நடைபெறாத நாட்களில் திட்டமிடப்பட்ட பாடங்களை எதிர்வரும் நாட்களில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இவ்வருடம் உயர்தரப் பரீட்சைகள் நவம்பர் மாதம் 25 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 20 ஆம் திகதி வரை நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த நிலையில் இடைநிறுத்தப்பட்டதன் காரணமாக நாளை புதன்கிழமை (04) ஆரம்பமாகி டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 Comments