BCCI செயலாளராக பதவி வகித்து வந்த ஜெய் ஷா சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக இன்று (01) முதல் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.
BCCI பொதுச் செயலாளரும், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மகனுமான ஜெய்ஷா சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ICC) தலைவராக ஆகஸ்டில் இடம்பெற்ற தேர்தலில்போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.
ஜெய் ஷா 2019 ஒக்டோபர் முதல் BCCI செயலாளராகவும், 2021 ஜனவரி முதல் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராகவும் பணியாற்றியிருருந்தார். 35 வயதிலேயே இப்பதவியை எட்டிய இளம் கிரிக்கெட் நிர்வாகி இவர் என்பதுடன், 57 வயதுக்குட்பட்ட ஒருவர் ICC இன் தலைமைப் பதவியை பொறுப்பேற்பது இதுவே முதல்முறையாகும்.
0 Comments