Ticker

6/recent/ticker-posts

அமெரிக்காவின் அதிரடித் தீர்மானங்களால் 08 நாடுகளின் HIV சிகிச்சை பாதிப்பு.

வெளிநாடுகளுக்கு அமெரிக்கா வழங்குகின்ற உதவிகளை இடைநிறுத்துவதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முடிவெடுத்துள்ளார். இத்தீர்மானது பல நாடுகளை பல்வேறு ரீதியில் பாதிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


அந்த வகையில் உலகளாவிய ரீதியிலுள்ள 08 நாடுகளில் HIV தொற்றுக்கான சிகிச்சைகளை வழங்குவதில் சிக்கல் நிலை ஏற்படும் என்று சர்வதேச ஊடகங்கள் சுட்டிக் காட்டியுள்ளன.



இதன்படி ஹைட்டி, கென்யா, தென்சூடான், மாலி, நைஜீரியா மற்றும் உக்ரைன் உள்ளிட்ட 08 நாடுகள் HIV தொற்றுக்கான சிகிச்சைகளைப் பெற்றுக் கொள்வதில் பாரிய சிரமங்களை எதிர்கொள்ளும் என்று உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.



குறித்த நாடுகளில் உயிர் காக்கும் மருந்துகள் விரைவில் தீர்ந்து விடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் காணப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.



HIV தொற்றால் ஏற்படும் பாதிப்பினால் எதிர்வரும் 20 வருடங்களுக்கான முன்னேற்றம் பாதிக்கப்படும் என்று உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் அவர்கள் தெரிவித்துள்ளார்.



இதனால், 10 மில்லியனுக்கும் அதிகமானோர் பாதிக்கப்படுவதுடன், 03 மில்லியனுக்கும் அதிகமானோர் HIV தொற்றினால் உயிரிழக்க நேரிடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.



அமெரிக்கா தற்போது வெளிநாடுகளுக்கு உதவிகள் வழங்குவதை இடைநிறுத்தியதைத் தொடர்ந்து HIV, போலியோ, மலேரியா மற்றும் காச நோய் ஆகியவற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் கருத்து தெரிவித்துள்ளன.



TO JOIN WITH US:

Post a Comment

0 Comments