Ticker

6/recent/ticker-posts

தாய்க்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்த 13 வயது சிறுவன்.

சீனாவில் 13 வயது சிறுவன் தனது தாய்க்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டதை தொடர்ந்து, வீட்டிலேயே பிரசவம் பார்த்துள்ளார்.



இச்சம்பவம் ஃபுஜியன் மாகாணத்தில் இடம் பெற்றுள்ளது. 13 வயது சிறுவன் ஒருவர் அவசர சிகிச்சை மையத்தை அழைத்து, தனது 37 வார கர்ப்பிணித் தாயின் பனிக்குடம் உடைந்து விட்டதாகவும், அவருக்கு கடுமையான வலி ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.



அம்புயூலன்ஸ் வர தாமதமானதால், தொலைபேசியில் மருத்துவ உதவியாளர் சென் சாயோஷூனின் ஆலோசனையின் பிரகாரம், தனது தாய்க்கு சிறுவனே பிரசவம் பார்த்துள்ளார். இதன் போது அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.



சிறிது நேரத்திற்குப் பின்னர், மருத்துவ உதவியாளர்கள் வந்து தாயையும் குழந்தையையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். தற்போது தாயும் சேயும் நலமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


Post a Comment

0 Comments