04 வருடங்களுக்கு ஒரு தடவை நடைபெறும் ஒலிம்பிக் போட்டியை 2028 ஆம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலும், 2032 ஆம் ஆண்டில் அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரிலும் நடத்துவதற்கு எற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், 2036 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்த இந்தியா மும்முரமாக முயற்சித்து வருகின்றது.
குஜராத் மாநிலத்தின் காந்தி நகரில் இலங்கை மதிப்பில் 1,000 கோடி மதிப்பில், பரா ஒலிம்பிக் போட்டிகளுக்கான, பயிற்சி மையத்திற்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா காணொலி வாயிலாக கலந்து கொண்டு அடிக்கல்லை நாட்டினார். அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்திற்கு அடுத்துள்ள சர்தார் படேல் விளையாட்டு வளாகத்தில் பத்து பெரிய மைதானங்கள் கட்டப்படும்.
முன்னதாக, தனது அமெரிக்கா பயணத்தின் போது இந்தியப் பிரதமர் மோடி, 2036 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கான சாத்தியமான முயற்சிகளை இந்தியா மேற்கொண்டு வருவதாக தெரிவித்திருந்தார்.
2036 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டியினை, இந்தியாவின் குஜராத் மாநில அகமதாபாத்தில் நடாத்த, இந்திய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றது. இந்தியாவில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் வாய்ப்பை பெற்றால் இந்தியாவில் நடைபெறும் முதலாவது ஒலிம்பிக் தொடராக அது அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments