தேசிய பாதுகாப்பு தொடர்பான சிக்கல்கள் மற்றும் தரவு அல்லது தகவல் விபரங்களைப் பாதுகாப்பதற்கான அரசாங்க நிறுவனங்களின் உரிமையை உத்தரவாதம் செய்யும் வரை, எலோன் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் ப்ரோட்பேண்ட் சேவைகள் இலங்கையில் நிறுத்தி வைக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
2024 ஆம் ஆண்டு கடந்த அரசாங்கத்தின் காலத்தில், இலங்கையின் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையகம், ஸ்பேஸ்எக்ஸின் செயற்கைக்கோள் பிரிவான எலோன் மஸ்க்கின் ஸ்டார்லிங்கிற்கு, நாட்டிற்கு செயற்கைக்கோள் ப்ரோட்பேண்ட் சேவைகளை வழங்குவதற்கான உரிமத்தை வழங்கியது.ஸ்டார்லிங்க் நிறுவனம்
அத்துடன் ஸ்டார்லிங்க் நாட்டிற்குள் நுழைவதற்கும் வழி வகுத்தது. இதனையடுத்து, மஸ்க்கின் ஸ்டார்லிங்க் நிறுவனம், மார்ச் 2024 இல் இலங்கையில் செயல்பாடுகளை அமைப்பதற்கான ஒரு திட்டத்துடன் அணுகியது.இதன்படி, அரசாங்கத்தின் கீழ், ‘ஸ்டார்லிங்க்’ லங்கா (பிரைவேட்) லிமிடெட் மூலம் செயல்படுத்தப்படும் ‘ஸ்டார்லிங்க்’ செயற்கைக்கோள் ப்ரோராட்பேண்ட் சேவைகளுக்கான கட்டணத் திட்டங்களையும் தொலைத் தொடர்புகள் ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு அங்கீகரித்துள்ளது.
மாதத்திற்கு 9,200 ரூபாய் முதல் 1.8 மில்லியன் ருபாய் வரையிலான ஐந்து ‘ஸ்டார்லிங்க்’ தொகுப்புகளுக்கு, ஆணைக்குழு ஒப்புதல் அளித்துள்ளது.
0 Comments