மெட்டா (Meta) நிறுவனம் தங்களுடைய வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில், வட்ஸ்அப் profile-லிலேயே பயனர்கள் தங்களின் இன்ஸ்டாகிராம் லிங்க்-ஐ இணைத்துக் கொள்ளும் வகையில் புதிய அப்டேட்டை அறிமுகப்படுத்தியுள்ளது.
அவ்வகையில், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், திரட்ஸ் ஆகிய 03 சமூக வலைதளங்களையும் வட்ஸ்அப்பில் இருந்தபடி இயக்கும் புது அப்டேட்டை (Update) வெளியிட்டுள்ளது.
வட்ஸ்அப்பில் பயனர்கள் setting இற்கு சென்று இன்ஸ்டா, பேஸ்புக், திரட்ஸ் என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். செட்டிங்-ல் profile சென்று லிங்க் ஆப்ஷனை கிளிக் செய்து இதில் இணைத்துக் கொள்ள முடியும்.
இது யார் யாருக்கு காட்ட வேண்டும் என்பதையும் எடிட் செய்து கொள்ள முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்புதிய அப்டேட் வட்ஸ்அப் பயனர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெரும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
0 Comments