லாகூரில் பிறந்த சகலதுறை ஆட்டக்காரர் Muhammad Arslan Abbas, இன்று (29) நேப்பியரிலுள்ள மெக்லீன் மைதானத்தில் பாகிஸ்தான் மற்றும் அணிகளுக்கிடையிலான போட்டியில் நியூசிலாந்து அணிக்காக விளையாடியுள்ளார்.
21 வயதான Abbas பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 24 பந்துகளில் அரைசதம் அடித்து ஒருநாள் அறிமுகப் போட்டியில் அதிவேகமாக அரைச்சதம் பெற்ற வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.
குறித்த சாதனையை 05 ஆண்டுகளுக்கு முன்பு இங்கிலாந்துக்கு எதிராக 26 பந்துகளில் அரைசதம் அடித்த சகலதுறை ஆட்டக்காரரான குருணால் பாண்ட்யாவின் சாதனையை முறியடித்தார் என்பது குறிப்பிட்டதக்கதாகும். போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் பந்து வீச்சினை தெரிவு செய்தமை குறிப்பிடத்தக்கது.
345 ஓட்டங்களை வெற்றி இலக்காக நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 44.1 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 271 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
0 Comments