Ticker

6/recent/ticker-posts

மூதூர் பெண்கள் கொலை: பேர்த்தி கைது.

 மூதூர் - தாஹா நகர் பகுதியில் 02 பெண்கள் கொலை செய்யப்பட்ட வழக்கில், கொலையுண்ட இரண்டு பேரினதும் பேர்த்தியான 15 வயது சிறுமி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்ட பெண்களின் சடலங்கள் இன்று (14) காலை வீடொன்றிலிருந்து கண்டெடுக்கப்பட்டன.

கொலை செய்யப்பட்டுள்ள இருவரும் 68 மற்றும் 74 வயதுடையவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு, குறித்த பெண்கள் இருவரும் திருமணமாகாதவர்கள் என்றும் ஓய்வு பெற்ற பாடசாலை ஆசிரியர் மற்றும் தாதியர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

Post a Comment

0 Comments