உண்ணாட்டரசிறை (திருத்தம்) சட்டமூலமானது இன்று (20) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. குறித்த சட்டமூலம் மீதான இரண்டாவது மதிப்பீட்டு விவாதம் இன்று 5.40 PM மணி முதல் 7.10 PM மணி வரை இடம் பெற்றது. இதனையடுத்து, குழு நிலையில் சட்டமூலம் கருத்திற் கொள்ளப்பட்டதுடன் திருத்தங்களின்றி நிறைவேற்றப்பட்டது.
இச்சட்டமூலம் 2025 மார்ச் முதலாம் திகதி முதலாவது மதிப்பீட்டுக்காக பாராளுமன்றத்திற்கு முன்வைக்கப்பட்டது. அத்துடன், உண்ணாட்டரசிறை (திருத்தம்) சட்டமூலத்தில் அரசியலமைப்பின் 79 வது உறுப்புரைக்கமைய சபாநாயகரான ஜகத் விக்கிரமரத்ன இன்று (20) தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார்.
அதற்கமைவாக, இச்சட்டமூலம் 2025 ஆம் ஆண்டில் 02 ஆம் இலக்க உண்ணாட்டரசிறை (திருத்தம்) சட்டமாக அமுலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments