கிண்ணியா அரச தாதியர் உத்தியோகத்தர்கள் சங்கத்தினர் இன்று திங்கட் கிழமை (17) வேலை நிறுத்தப் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
இப்போரட்டமானது பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கிண்ணியா தள வைத்தியசாலைக்கு முன்பாக நடைபெற்றது. விடுமுறை கொடுப்பனவு, மேலதிக கொடுப்பனவு மற்றும் பதவியர்வுக் காலத்தை 20 ஆக குறைத்தல் போன்ற கோரிக்கைகளை அரசாங்கம் செய்து தர வேண்டுமென்று தாதியர்கள் இதன்போது குறிப்பிட்டுள்ளனர்.
“பட்ஜட்டை கொண்டு வந்தது சுகாதார ஊழியர்களை தாக்கவா?“
“அதிகாரிகளே 1/60 விட 1/200 பெரிதா?“
“எங்களது மேலதிக 1/80 என்று கூறிய மெதிவத்த எங்கே?“
“24 மணித்தியாலயம் 365 நாட்கள் வேலை செய்பவர்களுக்கு குறைத்தது ஏன்?“
“சுகாதார ஊழியர்களுக்கு மாத்திரம் குறைக்கப்பட்டது ஏன்?“
போன்ற வாசகங்கள் அடங்கிய சுலோகங்களை ஏந்தியவாறு இப்போரட்டத்தை தாதியர்கள் முன்னெடுத்திருந்தனர்.
இப்போராட்டத்தில் கிண்ணியா தள வைத்தியசாலையில் வேலை செய்யும் தாதியர்கள் 01 மணித்தியாலய வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 Comments