அவுஸ்திரேலியா அருகேயுள்ள பசுபிக் பெருங்கடலில் உள்ள தீவு நாடாக பப்புவா நியூகினியா காணப்படுகின்றது. சுமார் 20 இலட்சம் மக்கள் தொகை வசிக்கும் இந்நாடு சுற்றுலா தலங்களுக்கு பெயர் போனது.
இங்குள்ள பொதுமக்கள் பிரபல சமூக வலைதளமான பேஸ்புக்கை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றார்கள். அங்கு சுமார் 13 இலட்சம் பேர் பேஸ்புக்கில் கணக்கு வைத்துள்ளனர்.
இதற்கிடையே, பேஸ்புக் மூலமாக போலி செய்திகள் மற்றும் ஆபாச படங்கள் அதிகளவில் பரப்பப்படுவதாகவும் முறைப்பாடுகள் எழுந்தன. இதனால் பேஸ்புக்குக்கு தடை விதிக்கப்படும் என்று தகவல் வெளியாகி வந்தது.
இந்நிலையில், பப்புவா நியூகினிவாவில் பேஸ்புக்குக்கு திடீரென தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, பொதுமக்கள் பேஸ்புக்கை பயன்படுத்த முடியாமல் சிரமமடைந்துள்ளனர்.
இது மக்களின் கருத்துச் சுதந்திரத்தையும், பேச்சுரிமையையும் பறிப்பதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
0 Comments