கிண்ணியா தள வைத்தியசாலையில் பணியாற்றும் துணை வைத்திய நிபுணர்கள் அடையாள வேலை நிறுத்தம் போராட்டத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (18) ஈடுபட்டனர்.
இதன் காரணமாக, நோயாளிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கு உட்படுத்தப்பட்டு, ஏமாற்றத்துடன் வீடு சென்றுள்ளனர். மாதாந்தம் கிளினிக் பெறுவதற்காக வந்த, நீரிழிவு நோயாளர்கள் மருந்துகள் எதுவும் வழங்கப்படாமையினால், ஏமாற்றத்துடன் வீட்டுக்கு திரும்பிச் சென்றனர்.
"அரசாங்கம் சம்பளத்தினை எவ்வளவுதான் அதிகரித்தாலும், மக்களுக்கு சேவையாற்ற வந்தவர்கள் மக்களுக்கு சேவையாற்ற வேண்டும். இதனை விடுத்து, போராட்டத்தில் ஈடுபடுவதன் மூலமாக மக்களை கஷ்டத்துக்கு ஆளாக்க வேண்டாம். நாங்கள் ஏழைகள்; பொருளாதார நெருக்கடியால் தொடர்ந்து அவதிப்பட்டு கொண்டிருக்கின்றோம்.
ஆனால், அரசாங்கம் அவர்களுக்கு தொடர்ந்தும் சம்பளத்தை அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. இந்நிலையில், அவர்கள் மக்களை இவ்வாறு சிரமத்துக்கு உள்ளாக்குவதில் எந்தவித நியாயமும் இல்லை" என்று ஏமாற்றத்துடன் வீடு செல்கின்ற நோயாளிகள், தங்களுடைய விசனத்தை தெரிவித்ததையும் அவதானிக்கக் கூடியதாக இருந்தது.
0 Comments