உடலில் எங்கும் பச்சை குத்தியிருப்பவர்கள் பொலிஸ் துறையில் பணியாற்றுவதற்கு தகுதி பெற மாட்டார்களென்று இலங்கை தலைமைப் பொலிஸ் பரிசோதகர் மனோஜ் சமரசேகர குறிப்பிட்டுள்ளார்.
உடலில் பச்சை குத்திய ஒருவர் தனது முதுகலைப் பட்டப்படிப்பை முடித்து ஆயுதப் படைகளில் பணிபுரிய விரும்பினாலும்கூட, அவருக்கு அந்த வாய்ப்பு கிடைக்காது என்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடலின் மிகப்பெரிய உறுப்பு தோல் ஆகும். அந்த தோலை அழிப்பது நல்லதல்ல, நாம் இது தொடர்பில் ஆராய வேண்டியது அவசியமாகும்.
எனவே, பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றிருந்தாலும், உடலில் பச்சை குத்தியிருந்தால் எந்தவொரு ஆயுதப் படையிலும் இணைந்து பணியாற்ற வாய்ப்பு கிடைக்காது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
0 Comments