மாத்தறை நீதவான் நீதிமன்றத்தின் கைது உத்தரவை இடைநிறுத்த இடைக்கால உத்தரவை கோரிய முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தாக்கல் செய்த ரிட் மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (17) நிராகரித்துள்ளது.
மாத்தறை நீதவான் பிறப்பித்த உத்தரவைத் தொடர்ந்து, தேசபந்து தென்னகோன் தன்னைக் கைது செய்வதைத் தடுக்க இடைக்காலத் தடை உத்தரவைப் பிறப்பிக்குமாறு நீதிமன்றத்தினை கோரியிருந்தார்.
2023 ஆம் ஆண்டு வெலிகமவிலுள்ள ஒரு ஹோட்டலில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக மாத்தறை நீதவான் நீதிமன்றம் அவரைக் கைது செய்வதற்கு உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 Comments