Ticker

6/recent/ticker-posts

ரத்தன் டாடா எழுதிய உயில். 04 ஆயிரம் கோடி சொத்து யாருக்கு?

பிரபல தொழிலதிபரும், டாடா குழுமத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா கடந்த 2014 இல் உடல் நலக்குறைவால் காலமானார்.

இவருக்கு இந்தியாவிலும், வெளிநாட்டிலும் உள்ள அசையும் மற்றும் அசையா சொத்துகள் உட்பட அவரருடைய மொத்த சொத்துக்களின் மதிப்பு 4,000 கோடி என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.


அந்த சொத்துக்கள் யார் யாருக்கு கிடைக்க வேண்டும் என்று ரத்தன் டாடா உயில் எழுதி வைத்திருந்தார்.


அவர், 'அவருக்கு கடைசி காலத்தில் மிகவும் நெருக்கமாக இருந்த தனது உதவியாளர் சாந்தனு நாயுடு, அவருடைய சகோதரர் ஜிம்மி டாடா, ஒன்று விட்ட சகோதரிகள் ஷிரீன் மற்றும் டீனா (தாயின் இரண்டாது திருமணத்தின் மூலம் பிறந்தவர்கள்) ஆகியோருக்கு சொத்துக்கள் கிடைக்கும் வகையில் உயில் எழுதியிருந்தார்.


தற்போது ரத்தன் டாடாவின் 02  சகோதரிகளான மிஸ்திரி மற்றும் டாடா டிரஸ்ட்ஸ் அறங்காவலர் டேரியஸ் ஆகியோர் அவரது உயிலை நிறைவேற்றுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். உயிலை நிறைவேற்ற தங்களுடைய நேரத்தையும், முயற்சியையும் அர்ப்பணித்ததற்காக அவர்களுக்கு தலா 5 இலட்சம் ரூபாய் பாராட்டு தொகையாக வழங்கப்பட்டது.



'எனது இந்த கடைசி உயிலை எதிர்த்து யாராவழ்து நீதிமன்றத்திற்கு சென்றால், அந்நபருக்கு நான் வழங்கிய சலுகைகள் திரும்ப பெறப்படும். எனது சொத்தின் எந்த பகுதியிலும் அந்நபருக்கு எந்தவொரு உரிமையும் கிடையாது' என்று ரத்தன் டாடாவின் பெப்ரவரி 23 ஆம் திகதி 2022  ஆம் ஆண்டு திகதியிடப்பட்ட உயில் கூறுகிறது.


ரத்தன் டாடாவின் உயிலை நிறைவேற்றுபவர்கள் அதனை உறுதிப்படுத்த மும்பை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.


தற்போது, ரத்தன் டாடாவின் நண்பருக்கு 6.16 கோடி ரூபாய் பெறுமதியான சொத்தையும், 03 துப்பாக்கிகளையும் பெறுவதோடு ரத்தன் டாடாவின் 02 சகோதரிகளும் அவரது சொத்தில் மூன்றில் ஒரு பங்கை பெறுகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.




Post a Comment

0 Comments