Ticker

6/recent/ticker-posts

அரச சேவையில் 30,000 வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்புச் செய்தல் தொடர்பான அறிவிப்பு - ஜனாதிபதி

அரச சேவையில் 30,000 இளைஞர், யுவதிகளை இணைத்துக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு, புத்தளம் நகரத்தில் இடம் பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

நாங்கள் 30,000 புதிய, திறமையான இளைஞர்களை வேலைக்கு அமர்த்துகின்றோம். அதற்கான நிதி தற்போது ஒதுக்கப்பட்டுள்ளது. இப்போது நிறைய செய்தித்தாள்களில் விளம்பரங்கள் பிரசுரிக்கப்பட்டுள்ளன. அதற்கு விண்ணப்பியுங்கள், நாங்கள் உங்களுக்கு வேலை வாங்கித் தருகிறோம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.


Post a Comment

0 Comments